ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் : தினமும் 33 ஜிபி டேட்டா ஆஃபர்...

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (14:32 IST)
நம் நாட்டில் பொதுத்துறையைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் கடும் பொருளாதார சிக்கலில் உள்ளது. முக்கியமாக அதன் பெருமளவு வருவாய் அதன் ஊழியர்களுக்கே செல்வதால், அந்நிறுவனம் பெரும் சாவால்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில்  பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
நம், நாட்டில் தொலைத் தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், அதனால் ஏற்பட்டுள்ள போட்டியும் பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை பயனாளர்களுக்கு அளித்துவருகிறது. அதில், ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், போன்றவை தினமும் பயனாளர்களுக்கு பல ஆஃபர்களை அளித்து அவர்களைத் தக்க வைத்து வருகின்றனர்.
 
இந்தப் பொட்டியில் பி.எஸ்.என்.எல் இறங்கியுள்ளது. அதாவது பயனாளர்களுக்கு ரூ. 1999 விலையில் தினமும் 33 ஜி.பி டேட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இந்தியா முழுவதிலுமுள்ள லேண்ட்லைன் சேவையில் வாய்ஸ் கால் வசதியும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ஏர்டெல் வி ஃபைபர் , மற்றும் ஜியோ பைபர் போன்றவற்றின்  (250mbps ) வேகத்தை விட பி.எஸ்.என்.எல் வேகம் குறைவாக உள்ளது. தினசரி அளவை கடந்தால் 4 mbps வேகம் குறையும்.
இந்த பிராட்பேண்ட் சலுகையில் பயனாளர்களுக்கு தினமும் 33 ஜிபி டேட்டா. இதன் வேகம் 100 mbps, நாள் தோறும் வழங்கப்படும் டேட்டா அளவைத் தாண்டினால் அதன் வேகம் 4 mbps குறையும். 
 
மேலும்,சில ஆஃபர்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவன இணையதளத்தில் இதற்கான விவரங்களைப் பெறலாம். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி.. 13 தொகுதிகளில் மட்டும் காங். முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments