ஜியோவை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இணையதள சேவையில் சலுகை வழங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் இலவச 4ஜி டேட்டா இலவசமாக வழங்கபோவதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஜியோ 4ஜி சேவை இந்தியாஅவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது மேலும் 3 மாதத்திற்கு, அதாவது 2017 மார்ச் மாதம் வரை இலவச சேவையை நீடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பி.எஸ்.என்.எல்., 4ஜி எஸ்பிரஸ் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் தகவல்கள் பரவி வருகிறது. சிம் இலவசம், 4ஜி டேட்டா, டாக்டைம் இலவசம்.