ஜெயலலிதா உடல் நிலை உண்மை நிலை: ஸ்டாலின் பேட்டி!
ஜெயலலிதா உடல் நிலை உண்மை நிலை: ஸ்டாலின் பேட்டி!
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 70 நாட்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமாகிவிட்டார் என சொல்கிறார்கள். ஆனால் அவரது உடல்நிலை குறித்த உண்மை நிலையை ஊடகங்கள் தான் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வருகின்றன. ஆனால் உண்மை நிலை எது என்பதில் இன்னமும் சந்தேகத்துடனே மக்கள் உள்ளனர். அவரது உடல்நிலை குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை என்பது பொதுவாக பலரும் வைக்கும் குற்றச்சாட்டு.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் விவசாயிகள் பிரச்சனை குறித்து முதல்வர் அறிக்கை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
முதல்வரின் உடல்நிலை குறித்து ஊடகங்கள் தான் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும், தொடர்ந்து பேசுகிறார்கள், உணவு அருந்துகிறார்கள் என யார் யாரோ சொல்கிறார்கள் ஆனால் விவசாயிகள் பிரச்சனைக்கு ஏன் இதுவரை அறிக்கையோ நிவாரணமோ முதல்வர் ஜெயலலிதா தெரிவிக்கவில்லை என்றார் மு.க.ஸ்டாலின்.