Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2.8 வினாடியில் 100 கி.மீ. வேகம் லம்போகினி அவென்ட்அடார் எஸ். வி.ஜே.63 இந்தியாவில் அறிமுகம்

2.8 வினாடியில் 100 கி.மீ. வேகம் லம்போகினி அவென்ட்அடார் எஸ். வி.ஜே.63 இந்தியாவில் அறிமுகம்
, புதன், 9 ஜனவரி 2019 (19:02 IST)
பந்தய கார்களில் மிகவும் பிரபலமானது லம்போகினி. இந்த கார் வைத்திருப்பதை பெரும் அந்தஸ்தாக பணக்காரர்கள் கருதுகிறார்கள்.



அதிவேகத்தில் செல்லக்கூடிய இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. கோடிகளை கொட்டி சிலரே இந்த லம்போகினி காரை வாங்குவார்கள். இந்நிலையில் இந்த நிறுவனம் அவென்ட்அடார் எஸ். வி.ஜே.63 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.  கடந்த ஆண்டு இந்த மாடலில் ஒரு காரை இந்தியாவில் விற்ற இந்நிறுவனம், இந்த ஆண்டு பெங்களூருவில் ஒரு காரை டெலிவரி செய்ய உள்ளது. 
 
இந்த எஸ். வி.ஜே.63  மாடல் காரில் வி-12 என்ஜின் உள்ளது. இது 770 ஹெச்.பி. திறனை 8500 ஆர்.பி.எம்.இல் வெளிப்படுத்தக்கூடியது.  720 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 6750 ஆர்.பி.எம்.மில் வெளிப்படுத்தும். இந்த கார் 2.8 வினாடியில் 100 கிலோமீட்டர் வேகத்தை தொட்டு விடுமாம். இந்த கார் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேடாருக்கு முன்பு போர் விமானங்களைக் கண்காணிக்க உதவிய ஓசை சுவர்