Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரேடாருக்கு முன்பு போர் விமானங்களைக் கண்காணிக்க உதவிய ஓசை சுவர்

ரேடாருக்கு முன்பு போர் விமானங்களைக் கண்காணிக்க உதவிய ஓசை சுவர்
, புதன், 9 ஜனவரி 2019 (17:54 IST)
இந்த சுவர் ஒரு விவசாய நிலப்பரப்பில் இருக்கிறது
 
இன்னும் இந்த சுவர் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ தெரியவில்லை - இது 'மெட்ராஸ்' திரைப்படத்தில் வரும் ஒரு வசனம். ஆனால், பிரிட்டனில் ஒரு சுவர் வடிவமைப்பு பல உயிர்களை காப்பாற்றியுள்ளது.
எதிரி விமானத்தின் ஒலிகளை கிரகிப்பதற்காக உட்புறம் குழிந்த வடிவிலான சுவரை பிரிட்டன் வடிவமைத்தது. அதாவது, விமான ஒலி அலைகளை இது உள்வாங்கும். இதனை கண்காணிப்பதன் மூலம், தரைப் படைகளை உஷார்படுத்தி பிரிட்டன் நகரங்களை காக்க முடியும் என்பது திட்டம்.
 
ஓசை கண்ணாடிகள்
 
மஜ் வில்லியம் சன்சோமால் வடிவமைக்கப்பட்ட இந்த சுவர் வடிவம் ஓசை கண்ணாடிகள் என்று அழைக்கப்பட்டது. ராடார் பயன்பாட்டுக்கு வந்து பிரபலமடையும் வரை அந்த சுவர் வடிவம் பயன்பாட்டில் இருந்தது.
 
பல உயிர்களை காப்பாற்றிய சுவர்
 
இந்த சுவர் குறித்த கதைகளை தனது தந்தையிடமிருந்து கேட்ட ஜோ பெட்டெட் ஸ்மித் பிரிட்டன் கடற்கரையோரங்களில் மிச்சமிருக்கும் இது போன்ற சுவர் அமைப்புகளை ஆவணப்படுத்தினார்.
 
அப்பாவின் கதைகள்
 
பெட்டெட் ஸ்மித், "நான் சிறுவனாக இருந்த போது, எனது தந்தை எனது தாத்தா குறித்து ஏராளமான கதைகள் சொல்லி இருக்கிறார். அவருக்கு ராடார் தொழில்நுட்பத்தில் இருந்த விருப்பம் குறித்து சொல்லி இருக்கிறார்."
 
இந்த சுவர் 1916ஆம் ஆண்டு ரெட்கார் பகுதியில் கட்டப்பட்டது. அப்போது இதனை சுற்றி சதுப்பு நிலம் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது வீடுகளாக நிரம்பி வழிகிறது.
 
முதலில் ஸ்மித் தன் குடும்பம், தன் குடும்பத்திற்கும் போருக்கும் இருந்த தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். இந்த ஆய்வில் அவருக்கு இந்த ஓசை கண்ணாடி குறித்து தெரியவந்திருக்கிறது. அந்த புள்ளியிலிருந்து அவர் ஆர்வம் ஓசை சுவர் நோக்கி சென்று விட்டது.
 
பல இடங்கள் அலைந்து திரிந்து அந்த சுவர்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்மாணிக்கவேலுக்கு துரைமுருகன் ஆதரவு: பம்மும் அதிமுக