Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் மாண்புகள் என்ன...?

ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் மாண்புகள் என்ன...?
ரமலான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர். ஒரு மாத காலமாக இறைவன்  கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும் தாகித்திருந்தும் புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும் களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.
புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள், பிறை தெரிந்தவுடன் ரம்ஜான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இந்த நந்நாளில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதுடன் சமூக நல்லினக்க்கதையும் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்கும் மாண்புகளையும் அதன் கோட்பாடுகளையும் பற்றியும் நாம் விரிவாக பார்போம்.
 
இஸ்லாம் கூறும் ரம்ஜான் பெருநாள் வெறும் கொண்டாட்டத்துக்கான நாளல்ல. எந்த ஆரவாரமும் இல்லாமல் கொண்டாடப்படும் சாந்திமிக்க அமைதித்  திருநாளாகும். இந்தத்  திருநாளின் போது ‘இறைவன் மிகப்பெரியவன்’ எனும் புகழ்மொழியான ‘அல்லாஹு அக்பர்’ என்று இறைவனைப் புகழ வேண்டும்.
 
பசியறியும் பயிற்சி, தியாகத்தின் பாடம் என்ற இரு பெரும் உண்மைகளை புரியவைத்து அதற்கு நன்றி செலுத்தும் தருணங்களாகவே 'பெருநாள்'  கொண்டாடப்படுகிறது. பெருநாள் என்பது இறைவனை வணங்குவது, அவன் புகழ்பாடுவது, அவனுக்கு நன்றி செலுத்துவது என்ற அம்சங்கள்தான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவகிரக தோஷங்கள் விலக சொல்ல வேண்டிய மந்திரம்...!