வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ படம், ரம்ஜான் விடுமுறையில் ரிலீஸாகத் திட்டமிடப்பட்டு வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரம்ஜான் விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்.