Publish Date: Thu, 07 Oct 2021 (16:12 IST)
Updated Date: Thu, 07 Oct 2021 (16:13 IST)
ஐபிஎல் தொடரின் ஐம்பத்தி மூன்றாவது போட்டி இன்று துபாய் நகரில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ருத்ராஜ் மற்றும் டூபிளஸ்சிஸ் களமிறங்கிய நிலையில் ருத்ராஜ் 12 ரன்களில் அவுட்டானார். அதேபோல் ராபின் உத்தப்பா 2 ரன்களில் அவுட் ஆனார் என்பதும், மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது
தற்போது டுப்லஸ்ஸிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு பேட்டிங் செய்து வருகின்றனர் என்பதும் சென்னை அணி சற்று முன் 3 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வென்றால் அந்த அணி 12 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு சில வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
siva
Publish Date: Thu, 07 Oct 2021 (16:12 IST)
Updated Date: Thu, 07 Oct 2021 (16:13 IST)