Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் 5 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Advertiesment
Water
, வியாழன், 7 அக்டோபர் 2021 (09:42 IST)
சென்னையில் 5 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், பெரியார் சாலையில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று இரவு 8 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை ஐந்து இடங்களில் குழிநீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிபேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வராது. அவசர தேவைக்கு தண்ணீர் தேவைப்பட்டால் லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு 8144930905 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் என அறிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் ரூ.192 உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!