ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி போராடி தோற்றது. பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் விழா நடைபெற்றுவருகிறது. இன்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடியது.
இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தனர்.
இந்த இமாலய ரன்கள் அடித்த பஞ்சா அணி கேப்டன் ராகுல் பங்கு முக்கியமானது.அவர் 50 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். கெயில் 40 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் சர்காரியா 3 விக்கெடுகள் மாரிஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணியினர் கடினமாக இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கினர். முதலியே விக்கெட் சரிந்தாலும், 7 விக்கெட்டுகள் இழந்து 217 ரன்கள் எடுத்தது தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் 119 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.