Publish Date: Tue, 28 Sep 2021 (19:31 IST)
Updated Date: Tue, 28 Sep 2021 (19:36 IST)
இன்று தொடங்கிய முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் 39 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது டெல்லி அணியால்.
இதையடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணி 128 என்ற இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.