Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50 அரை சதங்கள், 200 சிக்ஸர்கள், 10 ஆயிரம் ரன்கள்..! – தோற்றும் சாதனை புரிந்த வார்னர்!

Advertiesment
50 அரை சதங்கள், 200 சிக்ஸர்கள், 10 ஆயிரம் ரன்கள்..! – தோற்றும் சாதனை புரிந்த வார்னர்!
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (08:42 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் சன் ரைசர்ஸ் அணி தோல்வியடைந்தாலும் அதன் கேப்டன் வார்னர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் விமரிசையாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. முதலாவதாக பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 171 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே 19வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றிருந்தாலும் அதன் கேப்டன் டேவிட் வார்னர் இந்த ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் அவர் ஈட்டிய ஸ்கோர்களின் மூலமாக ஐபிஎல்லில் மொத்த ரன்களில் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளார். மேலும் அன்றை அரைசதம் மூலம் ஐபிஎல் தொடரில் மொத்தமாக 50 அரைசதங்கள் வீழ்த்தி அதிக அரைசதம் அடித்தவராக சாதனை படைத்துள்ளார். மேலும் நேற்றைய ஆட்டத்தில் அடித்த சிக்ஸர்கள் மூலமாக மொத்தமாக 200 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸ் அடித்த ஐபிஎல் வீரர்களில் 8வது இடத்தில் உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய சென்னை வீரர்