Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் போட்டியை அடுத்து டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர்: தேதி அறிவிப்பு

Advertiesment
ஐபிஎல் போட்டியை அடுத்து டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர்: தேதி அறிவிப்பு
, புதன், 28 ஏப்ரல் 2021 (21:44 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கே ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கலே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு சில வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்கே கடுமையான கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் தற்போது டிஎன்பிஎல் போட்டிகளும் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நெல்லை திண்டுக்கல் சேலம் கோவை ஆகிய நான்கு நகரங்களில் இந்த போட்டி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே ஐபிஎல் போட்டிக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன நிலையில் டிஎன்பிஎல் போட்டி தொடங்கும் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஎஸ்கே அணிக்கு 172 ரன்கள் இலக்கு கொடுத்த ஐதராபாத்!