Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியில் கொரோனா; நாளைய ஆட்டம் துறப்பு! – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (11:59 IST)
சிஎஸ்கே அணி பயிற்சியாளர் மற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில் நாளைய ஆட்டத்தை துறப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிஎஸ்கே மருத்துவ குழு சிறப்பு சிகிச்சை அளித்து வருவதாகவும், இந்த பாதிப்பால் சிஎஸ்கே அணி வீரர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட உள்ளதால் நாளை சன்ரைஸர்ஸுடன் நடைபெற இருந்த போட்டியை துறப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments