Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2023 - 2027 IPL Media Rights - யார் வசம் செல்லும்??

Advertiesment
2023 - 2027 IPL Media Rights - யார் வசம் செல்லும்??
, ஞாயிறு, 12 ஜூன் 2022 (11:30 IST)
அடுத்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கி 2027 ஆம் ஆண்டு வரை 5 ஐபிஎல் சீசன்களையும் டிஜிட்டலில் ஒளிபரப்புவதற்கான ஏலம் இன்று நடைபெறவுள்ளது. 

 
ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் விமரிசையாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் இணைந்ததால் அணிகளிம் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கி ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் முடிந்துவிடும் நிலையில் இந்த முறை இரண்டு மாதங்களாக ஐபிஎல் தொடர் நடைபெற்றது.
 
ஐபிஎல் தொடர் போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்த நிலையில், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கி 2027 ஆம் ஆண்டு வரை 5 ஐபிஎல் சீசன்களையும் டிஜிட்டலில் ஒளிபரப்புவதற்கான ஏலம் இன்று நடைபெறவுள்ளது. 
 
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையைப் பெற டிஸ்னி ஸ்டார், சோனி, ஸீ, வியாகாம், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இந்தபோட்டியிலிருந்து அமேசான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 பிரிவின் கீழ் இந்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் நடைபெறுகிறது. அவை பின்வருமாறு... 
 
A - இந்தியாவில் தொலைகாட்சியில் போட்டியை ஒளிபரப்பு செய்வதற்கு ( அடிப்படை விலை - 18,190 கோடி)
B - இந்தியாவில் OTT தளத்தில் போட்டியை ஒளிபரப்பு செய்வதற்கு ( அடிப்படை விலை - 12,210 கோடி)
C - NON EXCLUSIVE போட்டிகளை மட்டும் OTT தளத்தில் ஒளிபரப்பு செய்ய ( 18 போட்டிகள் ) (அடிப்படை விலை - 1,440 கோடி)
D - இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கு (அடிப்படை விலை 1110 கோடி )
 
இந்த 4 பிரிவையும் சேர்த்து ஐபிஎல் உரிமத்திற்கான அடிப்படை விலையே ரூ.32,890 கோடியாக  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஏலம் அதிக விலைக்கு போஉம் பட்சத்தில் பிசிசிஐ-க்கு ரூ. 45,000 கோடி வரை வருமானம் கிடைக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று 2வது டி20 போட்டி: பழிவாங்குமா இந்தியா?