Publish Date: Wed, 04 Nov 2020 (17:00 IST)
Updated Date: Wed, 04 Nov 2020 (17:26 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஷேன் வாட்சன் சிஎஸ்கே கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தைப் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கும் வாட்சனின் ரசிகர்களுக்கும் மிகவும் உணர்வுப் பூர்வமான ஒரு தருணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் வாட்சன் சிஎஸ்கே அணியின் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தில் தோனியின் பயோபிக்கை பார்க்க நேர்ந்தது. இந்திய கிரிக்கெட்டிலும், இந்திய மக்களிடம் அவர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று அதன் பிறகுதான் எனக்கு புரிந்தது. எனக் கூறியுள்ளார்.