ரோஹித் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் வெங்க்சர்கார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது.
இப்போது அவரது உடல்நிலையை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில் திடீரென்று நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா களமிறங்கினார். இதனால் அவரின் காயம் குறித்த வெளிப்படை தன்மை ஒன்றும் தெரியவில்லை. காயம் சரியாகிதான் அவர் விளையாடுகிறார் என்றால் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விரேந்திர சேவாக் உள்ளிட்டோர் ரோஹித் மீதும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மேலும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதையடுத்து இந்திய முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான வெங்சர்கார் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி இல்லை என்று இந்திய அணியின் உடற்கூறு மருத்துவர் நிதின் படேல். அப்படி இருக்கையில் ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடுகிறார். ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறார். ரோஹித் சர்மாவுக்கு தேசிய அணியை விட ஐபிஎல் கிரிக்கெட் தான் முக்கியம் என நினைக்கிறார் போலும். இதில் பிசிசிஐ தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளார்.