Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோல நடந்ததே இல்லை – மேக்ஸ்வெல் உறுதி!

Advertiesment
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோல நடந்ததே இல்லை – மேக்ஸ்வெல் உறுதி!
, புதன், 14 அக்டோபர் 2020 (16:04 IST)
பஞ்சாப் அணிக்காக விளையாடும் கிளன் மேக்ஸ்வெல் தன்னுடைய பேட்டிங் பார்ம் பற்றி அதிருப்தியாக பதிலளித்துள்ளார்.

பஞ்சாப் அணி இந்த சீசனை மிகவும் சிறப்பாக தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் மிகவும் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். ஆனால் மோசமான பேட்டிங் ஆர்டரால் வரிசையாக 4 போட்டிகளை தோற்றுள்ளது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல் எல்லாப் போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். இதுவரை நடந்த  5 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடவில்லை.  இதனால் அவரை தூக்கிவிட்டு அவருக்குப் பதில் கிறிஸ் கெய்லை விளையாட வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தனது பேட்டிங் பற்றி பேசியுள்ள மேக்ஸ்வெல் ‘எனக்கு நான் கேப்டனாக செயல்பட்ட 2017 ஆம் ஆண்டு சீசன்தான் மிக சிறப்பானது. ஏனென்றால் அப்போது நான் சிறப்பாக விளையாண்டு சில முறை மேன் ஆஃப் தெ மேட்ச் விருது வென்றேன். இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமானது. நான் எனது வேலையை முடிந்தவரை செய்யப் பார்க்கிறேன். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நான் விளையாடவில்லை. நான் வித்தியாசமான அனுபவங்களை ஐபிஎல் தொடரில் பெற்றிருக்கிறேன். இதுவரை நடந்துள்ள ஏழு போட்டிகளில் நான்கில் நான் ஆட்டமிழக்கவில்லை, இது எனது கிரிக்கெட் வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பியூஷ் சாவ்லாவை இறக்கியதற்கு இதுதான் காரணமா? ஆச்சரிய தகவல்