Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது தவறு – முன்னாள் வீரர் கண்டனம்!

Advertiesment
தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது தவறு – முன்னாள் வீரர் கண்டனம்!
, செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:44 IST)
கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்றில் 7 போட்டிகளில் மற்ற அணிகளோடு மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் தழுவி ஐபிஎல் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த முதல் சுற்றில் 7 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வந்த தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இயான் மோர்கன் புதிய கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். இரண்டாம் சுற்று ஆட்டங்களுக்கு இவரே கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அணிநிர்வாகத்தின் இந்த முடிவுக்கு முன்னாள்  வீரர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கம்பீர் மோர்கனால் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த  முடியாது எனக் கூறியிருந்த நிலையில் இப்போது முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் கேப்டனை மாற்றியது தவறான முடிவு எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருடன் பிரச்சனையா? லண்டனில் இருந்து பி வி சிந்து பதில்!