எதிர்பார்த்தது போலவே டாஸ் வென்று பவுலிங் எடுத்த தல தோனி!

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (19:00 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. சற்றுமுன் போடப்பட்ட டாஸில் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தல தோனி கொஞ்சம் கூட யோசிக்காமல் பவுலிங்கை தேர்வு செய்தார்
 
மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் இதுவரை இரண்டாவது பேட்டிங் செய்பவர்களுக்கே சாதகமாக இருந்துள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் டாஸ் வென்றவர்கள் இரண்டாவது பேட்டிங் செய்து வருகின்றனர். மேலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே பெரும்பாலும் வெற்றி பெற்று வருவதால் இன்று டாஸ் வெற்றி பெறுபவர்கள் பவுலிங் தான் எடுப்பார்கள் என்று ஊகிக்கப்பட்டது
 
இந்த நிலையில் சென்னை அணியில் ராயுடு, வாட்சன், ரெய்னா, ஜாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா, சாஹர், தாக்கூர், ஷர்மா மற்றும் தாஹிர் ஆகியோர் ஆடும் 11 பேர் அணியில் உள்ளனர்
 
அதேபோல் மும்பை அணியில் ரோஹித் சர்மா, டீகாக், யாதவ், யுவராஜ்சிங், பொல்லார்டு, ஹிருத்திக் பாண்ட்யா, க்ரிணால் பாண்ட்யா, பெஹ்ரண்டாவ், சாஹர், மலிங்கா, பும்ரா ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments