இந்திய கிரிக்கெட் அணியை வெற்றிப்பாதையில் எளிதில் அழைத்து சென்ற கேப்டன் விராத்கோஹ்லியால், ஐபிஎல் போட்டியில் இதுவரை தனது பெங்களூரு அணிக்கு ஒரு வெற்றியை கூட தேடித்தர முடியவில்லை என்பது பரிதாபகரமாக உள்ளது. நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி எப்போதுதான் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் 2 ரன்களும், இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும் அடிக்கப்பட்டது. 3வது பந்தில் ரன் ஏதும் இல்லை. 4வது பந்தில் ஒரு ரன் ஸ்டோக்ஸ் எடுக்க, 2 பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் பேட்டிங் செய்த திரிபதி ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.
ஸ்கோர் விபரம்:
பெங்களூரு அணி: 158/4 20 ஓவர்கள்
பார்த்தீவ் பட்டேல்: 67 ரன்கள்
ஸ்டோனிஸ்: 31 ரன்கள்
விராத் கோஹ்லி: 23 ரன்கள்
ராஜஸ்தான் அணி: 164/3
பட்லர்: 59 ரன்கள்
ஸ்மித்: 38 ரன்கள்
திரிபதி: 34 ரன்கள்
ஆட்டநாயகன்: கோபால் (3 விக்கெட்டுக்கள்)
இன்றைய போட்டி: மும்பை மற்றும் சென்னை