வாட்சன் அபார ஆட்டம்: சிஎஸ்கே அணி வெற்றி!

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (23:27 IST)
சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 83 ரன்களும், வார்னர் 57 ரன்களும் எடுத்தனர்.
 
176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி முதல் ஓவரை மெய்டன் ஓவராக மாற்றினாலும், ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. டூபிளஸ்சிஸ் எதிர்பாராதவிதமாக ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனாலும் வாட்சன் இன்று ருத்ரதாண்டவம் ஆடி சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டினார். 53 பந்துகளில் 96 ரன்கள் அடித்த வாட்சன் புவனேஷ்குமார் பந்தில் அவுட் ஆனார்.

இருப்பினும் சிஎஸ்கே அணி 19.5  ஓவரில் 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 16 புள்ளிகள் எடுத்து சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments