Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

176 ரன்கள் இலக்கு: சொந்த மண்ணில் சாதிக்குமா சிஎஸ்கே?

176 ரன்கள் இலக்கு: சொந்த மண்ணில் சாதிக்குமா சிஎஸ்கே?
, செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (22:10 IST)
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் மனிஷ் பாண்டே மிக அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 83 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். மேலும் ஒப்பனர் வார்னரும் 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணியின் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுக்களையும் தீபக் சஹார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரையில் 176 இலக்கு என்பது கொஞ்சம் கடினமான ஒன்றே. அதிலும் மூன்றாவது ஓவரிலேயே டூபிளஸ்சிஸ் ஒரு ரன்னில் அவுட்டாகிவிட்டதால் சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வாட்சன் மற்றும் சுரேஷ் ரெய்னா தற்போது பொறுப்புடன் விளையாடி வருவதால் அணியின் ஸ்கோர் உயர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. சிஎஸ்கே அணி சற்றுமுன் வரை 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது
 
webdunia
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். சிஎஸ்கே அணிக்கு இன்னும் 3 லீக் போட்டிகள் மட்டுமே இருப்பதால் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்றது சிஎஸ்கே: பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி!