டி20 போட்டி - புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா

Webdunia
சனி, 5 மே 2018 (06:29 IST)
ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இந்திய அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாபை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனால் 175 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இப்போட்டியில்  ரோகித் சர்மா 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அவர் 2 சிக்ஸர்களையும் அடித்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். அதேசமயம் இந்திய அளவில் அதிக டி20 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கேப்டன்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என தகவல்..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் சோகம்..!

ஜடேஜாவை வாங்கியும் நோ யூஸ்.. கேப்டன் பதவி இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வைபவ் சூர்யவன்ஷி.. சலுகைகள் உண்டா?

ஒரே போட்டியில் 2 உலக சாதனை.. நமீபியாவுக்கு எதிராக போட்டியில் இந்தியா அசத்தல்...!

அடுத்த கட்டுரையில்
Show comments