Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வின்னிங் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர்: வெற்றிக்கு பின் கூறியது என்ன?

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (13:19 IST)
ஐபிஎல் தொடரில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் மோதின. இதில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. 
 
கவுதம் கம்பீர் கேப்டன்சியைத் துறந்ததையடுத்து, கேப்டனான ஷ்ரேயஸ் அய்யர், டெல்லி அணிக்காக அதிரடி இன்னிங்சை ஆடி 40 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். 
 
முதல் போட்டியில் கேப்டனாக களமிறங்கி, ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்ட ஷ்ரேயஸ் அய்யர், வெற்றிக்கு பின் கூறியது பின்வருமாறு...
 
அதுவும் கேப்டனாக முதல் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது பேருணர்ச்சியை அளிக்கிறது. உண்மையில் டாஸ் தோற்றது நல்லதாக போய்விட்டது. 
ஏனெனில், டாஸ் வென்றிருந்தால் நாங்கள் முதலில் பவுலிங் செய்வதாகவே இருந்தோம். ஆனால் முதலில் பேட் செய்த போது எங்களை நாங்கள் வெளிப்படுத்திக் கொள்ள சுதந்திரம் கிடைத்தது.
 
இரண்டு இன்னிங்ஸ்களுமே திருப்திகரமானது. இந்த சீசன் தொடங்கியது முதல் பிரித்வி ஷா அபாரமாக ஆடி வருகிறார். இவருடன் இணைந்து கொலின் மன்ரோ எங்களுக்கு 50 ரன்கள் கூட்டணி அமைத்துக் கொடுத்தனர். 
 
பவுலிங் வரிசையில் பந்தை ஒருவர் கையில் தயங்காமல் கொடுக்க முடியும் என்றல் அது பிளங்கெட்தான். அதுவும் என்னிடம் வந்து 16 மற்றும் 17வது ஓவரை அவர்தான் வீச வேண்டும் என்று கூறியது நெகிழ்ச்சியானது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments