Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணம்

இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணம்
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (23:52 IST)
சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும். பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை  தவிர்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
 
உடல் ஆற்றல் குறைந்து எப்போதும் சோர்வாகவும், சோம்பேறியாகவும் இருக்கும். எந்தவேலையையும் செய்யத் தோன்றாமல் சோர்வுடனே இருப்பீர்கள். நீங்கள்  செய்ய வேண்டும் என்று முற்பட்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. இப்படியான அறிகுறிகள் இரும்புச் சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய காரணிகளாகும்.
 
உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கிறது அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றாலும் இரும்புச் சத்துக் குறைபாடேக் காரணம். இப்படி வாயின்  உள்பக்கம் இரத்த ஓட்டம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருத்தல், உதடு, விரல் நகங்கள் நன்கு வெள்ளை நிறத்தில் மாறுகிறதெனில் இரும்புச் சத்துக் குறைபாடே  காரணம்.
 
அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பது, பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது, சாப்பிடும்  உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போவது, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகளால் அதிக ரத்தப் போக்கு போன்றவை  முக்கிய காரணங்கள். 
 
உடலில் எந்த ஒரு செல் வளர வேண்டும் என்றாலும் அதன் வளர்ச்சி ஊக்குவிக்க வைட்டமின் பி12 அவசியமாகிறது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும், ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு வளராமல் ரத்த சோகை ஏற்படும்.
 
படிகட்டு ஏறினால் மூச்சு வாங்குதல், நடந்தால் மூச்சு வாங்குதல் என கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வேலை செய்தாலும் மூச்சு வாங்குகிறது எனில் சாதாரணமாக  இருக்காதீர்கள். அதுவும் இரும்புச் சத்துக் குறைபாடின் அறிகுறிதான்.
 
வழக்கத்திற்கு மாறாக திடீரென இதயத் துடிப்பு வேகமாகிறது என்றால் அதற்கு இரும்புச் சத்துக் குறைபாடுதான் காரணம். ஏனெனில் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இதயம் ஆக்ஸிஜனை வெளியிட கூடுதலாக வேலை செய்யும்.
 
ஒரு இடத்தில் நிலையாக அமர்ந்திருத்தால் உடனே கால் மரத்து போகும். கால்கள் ஷாக் அடித்ததைப் போல் உணர்வீர்கள். அப்படி நீங்கள் அடிக்கடி உணர்கிறீர்கள்  எனில் அது சாதாரண விஷயமல்ல. இரும்புச் சத்து போதுமான அளவு இல்லை என்பதே காரணம் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்றாட உணவில் கம்பை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்...!!