Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செரிமானத்தை சீராக்க உதவுகிறதா பீச் பழம் !!

Advertiesment
செரிமானத்தை சீராக்க உதவுகிறதா பீச் பழம் !!
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (19:11 IST)
பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளது. இந்த பழத்தை வைத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கலாம். மேலும் சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.


பீச் பழம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. பீச் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் அதிக பசி எடுக்கும் உணர்வை குறைக்கும். இது உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.

பீச் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கும். மேலும் சிறுநீரகங்களையும் சுத்தப்படுத்தும்.

பீச் பழத்தில் பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மன அழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றன.

இரவில் படுக்கும் போது தோலுடன் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் அமைதியான தூக்கம் கிடைக்கும். மார்பு சளி, வறட்டு இருமல், தொண்டை புண் ஆகியவற்றை குணப்படுத்த பீச் பழம் பயன்படுகிறது.

பழத்தில் உள்ள சத்துக்கள் உணவுக்குழாய் பகுதியை சீராக இயங்க வைக்கும். பீச் பழம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும். பீச் பழத்தின் இலைகளை கசாயம் செய்து அருந்தலாம். இதனால் வயிற்றுப் புழுக்கள் அழியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி...?