Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நினைவாற்றல் அதிகரிக்க சில டிப்ஸ்

Advertiesment
Some tips to enhance memory
, செவ்வாய், 1 மார்ச் 2022 (00:14 IST)
உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல்  போகும்.
 
தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு  பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும். உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.
 
தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.
 
சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும்  கண்பார்வை அதிகரிக்கும்.
 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும், உங்களை எந்த  நோயும் அண்டாது.
 
2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பணங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை  சரியாகும் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான வேர்க்கடலை குழம்பு செய்ய !!