Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள் !!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (00:20 IST)
அமிலத் தன்மையினால் குடலில் ஏற்படும் அரிப்புகளை சரிசெய்யும். ரத்தத்தை சுத்தப்படுத்தி குடலில் சேர்ந்த கிருமிகளை வெளித்தள்ளும். வெள்ளைபோக்குக்கு  மருந்தாகிறது. 
 
ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. நச்சுக்கள் உடலில் சேராத வண்ணம் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. 
 
கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி குடல் புண்களை ஆற்றும், வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், தயிர். செய்முறை: 2 ஸ்பூன் தயிர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர அல்சர்  குணமாகும்.
 
கஸ்தூரி மஞ்சளை கொண்டு நீர்க்கோவை, தலைபாரத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், சுண்ணாம்பு. செய்முறை:  சிறிது கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு, சிறிது சுண்ணாம்பு சேர்க்கவும்.
 
கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி முகப்பூச்சு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடி, ரோஜா இதழ்கள், பால். செய்முறை: கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் கோரைக்கிழங்கு பொடி, அரைத்து வைத்திருக்கும் ரோஜாப்பூ இதழ்கள், சிறிது பால் விடவும். இதை நன்றாக கலந்து வாரம் ஒருமுறை முகப்பூச்சாக பயன்படுத்தி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். பருக்கள், சுருக்கங்கள், வறண்ட சருமம் மாறும். முகம் பொலிவு பெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments