Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலக்காய் டீ குடிப்பதன் நன்மை

Benefit of drinking
Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (23:12 IST)
மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ  தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
 
ஏலக்காயில் பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
 
உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் ஏலக்காய் டீயை குடிப்பதன் மூலம் நுரையீரலில் இரத்த ஒட்டம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் குறையும். தலைவலி அடிக்கடி வந்தால் அந்த சமயத்தில் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் தலைவலி விரைவில் குணமடையும்.
 
செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் அஜீரணக் கோளாறு, உப்பிசம் போன்றவை நீங்கும்.
 
ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் இதய நோய்களில் இருந்து விடுபடலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
 
விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி  வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.
 
வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments