Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஜாப் பூவில் உள்ள மருத்துவ குணங்கள்

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (23:05 IST)
ரோஜாவில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். வைட்டமின் சி'யின் முக்கியத்துவம் என்னவெனில், இது சருமத்தில் இருக்கும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது. 
 
ரோஜாப் பூ கற்கண்டு தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் சாப்பிட்டு வர சிறுநீரகம் மற்றும் இதயம் பலமாகும். மலச்சிக்கல் தீரும்.
 
வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களின் வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். அவர்களிடம் முகம் கொடுத்து பேச முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும்போதே, அதனுடன் சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்து மென்றுவர  அந்த வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.
 
ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும். ரோஜாப் பூ கஷாயம் செய்து கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும். மேலும் ரணங்களை கழுவ, அவை ஆறும்.
 
ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள கொடுத்துவர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும்.  வாய்ப்புண்ணும் குணமாகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments