Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் உள்ள பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகள்...!

Advertiesment
வீட்டில் உள்ள பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகள்...!
பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை தரும் பெரும்பாலான பூச்சிகளை அழித்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இவை உதவினாலும் நமது வீடுகளுக்குள் பல்லிகளைக் காண்பதை நாம் விரும்புவதில்லை.
நமக்கு இவை வேண்டாத விருந்தாளிகளே. கடைகளில் காணப்படும் பல்லி விரட்டி மருந்துகள், நச்சுத் தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கும் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் ஆபத்தானவை. எனவே யாருக்கும் ஆபத்தை உண்டாக்காத சுற்றுச்  சூழலுக்கு உகந்த வகையில் பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகள்.
 
காபித்தூள்:
 
சிறிது காபித்தூளை மூக்குப் பொடியுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பல்குத்தும் குச்சிகளின் முனையில்  இவ்வுருண்டைகளைக் குத்தி, பல்லிகள் நடமாடும் இடங்களில் அவற்றை வைக்கவும். இவற்றை உண்ணும் பல்லிகள் மடிந்துவிடும். நாப்தலின்  உருண்டைகள், சிறந்த பூச்சிக் கொல்லிகள், உங்கள் வீட்டு அலமாரிகளிலும், சிங்குகளிலும், கேஸ் அடுப்புக்கு அடியிலும் போட்டு வையுங்கள்.  பல்லிகளை விரட்டும் சிறந்த முறை இது.
 
மயில் இறகுகள்:
 
மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் பயப்படும். பல்லிகள் வசிக்கும் இடங்கள் நடமாடும் இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில்  இறகை ஒட்டி வையுங்கள். இதனால் உங்கள் வீட்டிலிருந்து பல்லிகள் ஓடிவிடும்.
 
மிளகுத் தூள்:
 
பூச்சிக் கொல்லி ஸ்ப்ரே மற்றும் மிளகுத் தூளை தண்ணீருடன் கலந்து கொண்டு ஒரு பூச்சிக் கொல்லி ஸ்ப்ரே தயாரியுங்கள். சமையலறையில் உள்ள அலமாரிகள், டியூப்லைட் இடுக்குகள், அடுப்புகளுக்கு அடிப்புறம் மற்றும் ஃப்ரிட்ஜ் அடிப்புறம் ஆகியவற்றில் இக்கலவையைத்  தெளியுங்கள். இந்த வாசனையினால், எரிச்சலடைந்து பல்லிகள் ஒடிவிடும். குளிர்ந்த நீர் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சி செய்யப்பட்ட தண்ணீரை  பல்லிகள் மீது தெளியுங்கள். இதன் மூலம் பல்லியின் உடல் வெப்பநிலை குறைந்து அவற்றால் அசைய முடியாத நிலை உண்டாகும்.  அப்போது ஒரு அட்டைப் பெட்டிக்குள் பிடித்து அடைத்து வீட்டிற்கு வெளியே வீசி விடுங்கள்.
 
வெங்காயம்:
 
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டி சுவர்களில் தொங்கவிடுங்கள். பல்லிகளின் மறைவிடங்களில் போட்டு வையுங்கள். வெங்காயத்திலுள்ள கந்தக ஆவியானது. பல்லிகளால் சகிக்க முடியாத மணத்தை உண்டாக்கும். இதனால் பல்லிகள் அவ்விடத்தை விட்டு  ஓடிவிடும்.
 
முட்டை ஓடுகள்:
 
முடிந்த அளவுக்கு முழுதாகக் காட்சியளிக்கும் கோழி முட்டை ஓடுகளை பல்லிகள் நடமாடும் பகுதிகளில் போட்டு வையுங்கள். வீட்டுக்குள் வேறு ஒரு பெரிய உயிரினம் இருப்பதாகக் கருதி பல்லிகள் ஓடிவிடும். முட்டை ஓடுகளை 34 வாரங்களுக்கு ஒரு முறை மாற்றவேண்டும்.
 
ஸ்ப்ரே பாட்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெங்காயச் சாறு மற்றும் தண்ணீரைக் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பூண்டுச் சாற்றினைக் கலக்கவும். நன்றாகக் குலுக்கி இதனை வீட்டு மூலைகளிலும், விரும்பும் வேறு இடங்களிலும், தெளியுங்கள்  அல்லது பூண்டுப் பற்களைக் கூட வீட்டு மூலைகளில் வைத்து பல்லிகளை விரட்டலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களாயிருந்தால் கட்டாயம் இதை படியுங்கள்....!