Publish Date: Mon, 28 Jan 2019 (15:52 IST)
Updated Date: Mon, 28 Jan 2019 (16:20 IST)
செம்மஞ்சேரியில் தனியார் கல்லூரி ஹாஸ்டலில் சட்னியில் உயிருடன் எலி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி இருக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர்களிலில் இருந்து வரும் மாணவர்கள் இந்த கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஹாஸ்டல் மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட சட்னி பாத்திரத்தில் எலி ஒன்று உயிரோடு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள், அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனால் கடும்கோபமடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.