Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலவித நோய்களையும் போக்கும் பொடுதலை மூலிகை !!

பலவித நோய்களையும் போக்கும் பொடுதலை மூலிகை !!
, செவ்வாய், 23 மார்ச் 2021 (23:53 IST)
பலவித நோய்களையும் போக்கும் பொடுதலையை அடிக்கடி உண்ணாமல் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ அளவோடு சேர்த்துக்கொள்வது  நல்லது.
 
பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். நீரிழிவு நோயின்  தாக்கம் குறைய நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. 
 
பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம்  வெகுவாக குறையும்.
 
வெள்ளை படுதல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். 
 
பொடுகு நீங்க இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து  ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
 
பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும். கை கால் வீக்கம் குணமாக கை, கால் கணுக்களில் வீக்கம் உள்ளவர்கள் இதன்  இலையை அரைத்து வீக்கமுள்ள பகுதியில் பூசி வந்தால் கை கால் வீக்கம் குறையும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசம்பு எதற்கு பயன்படுகிறது தெரியுமா....?