Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாங் இமோவின் தி கிரேட் வால் தப்புமா?

ஷாங் இமோவின் தி கிரேட் வால் தப்புமா?
, வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (16:47 IST)
சைனா, ஹாங்காங், கொரியா என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இயக்குனர் ஹாலிவுட் படம் இயக்குகிறார்கள். சொந்த  நாட்டில் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கிவிட்டு, ஹாலிவுட்டில் வணிக சினிமாக்கள் இயக்கி காணாமல் போனவர்களே அதிகம். அவர்களிலிருந்து மாறுபட்டவர் ஷாங் இமோ.

 
தி ரோடு ஹோம், நாட் ஒன் லெஸ் போன்ற உணர்வுப்பூர்வமான படங்களை எடுத்த இவர், ஹாலிவுட் சென்று எடுத்த  பிரமாண்ட படங்களும் சோடை போனதில்லை. அவரது புதிய படம், தி கிரேட் வால்.
 
சீன பெருஞ்சுவர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் பிரதான வேடம் ஏற்றுள்ளார்.  சென்ற வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் 21.5 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது. 150 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட படத்தின் ஓபனிங் 50 மில்லியன் டாலர்களையாவது  தாண்டியிருக்க வேண்டும்.
 
படத்தைப் பார்த்தவர்கள், ஷாங் இமோ என்ற மாஸ்டரின் படம்தான், ஆனால் மாஸ்டர் பீஸ் என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய பேட்மேன் படத்தை இயக்குவது யார் தெரியுமா?