பேட்மேன் படத்தை பலர் இயக்கியிருக்கிறார்கள். கிறிஸ்டோபர் நோலன் இயக்குனர் இருக்கையில் அமர்ந்த பிறகே பேட்மேனுக்கு ஒரு வெளிச்சம் கிடைத்தது. பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், தி டார்க் நைட் ரைசஸ் மூன்றும் நோலனின் இயக்கத்தில் வெளிவந்து ஹிட்டடித்தன. அதில், தி டார்க் நைட் பேட்மேன் படங்களிலேயே மாஸ்டர் பீஸ்.
இனிமேல் பேட்மேன் படங்களை இயக்குவதில்லை என்று நோலனும், நடிப்பதில்லை என்று கிறிஸ்டியன் பேலும் முடிவெடுத்த பிறகு, பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் - டான் ஆஃப் தி ஜஸ்டிஸ் படத்தில் பென் அப்லெக் பேட்மேனாக நடித்தார். இயக்கியது 300 படத்தை இயக்கிய ஸாக் ஸ்னைடர்.
தி பேட்மேன் என்ற பெயரில் புதிய பேட்மேன் படம் தயாராகிறது. இதில் யாரை இயக்குனராகப் போடலாம் என்று யோசித்து மேட் ரீவ்ஸை ஒப்பந்தம் செய்துள்ளனர். டான் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் படத்தை இயக்கியவர் இவர்தான். பேட்மெனாக பென் அப்லெக்கே நடிக்கிறார்.