Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தாடி.. என்ன ஸ்டண்ட் இது? ஒத்த வீடியோவில் மொத்த பேரையும் அலறவிட்ட டாம் க்ரூஸ்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (10:48 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்திற்கான ஸ்டண்ட் வீடியோ வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்து தொடர்ந்து வெளியாகி வரும் பட வரிசை ‘மிஷன் இம்பாசிபிள்’. 1996ல் இதன் முதல் பாகம் வெளியான நிலையில் இதுவரை மொத்தம் 6 பாகங்கள் இந்த படவரிசையில் வெளியாகியுள்ளது. இந்த படங்களின் சிறப்பம்சமே இந்த படங்களில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளை டாம் க்ரூஸ் சொந்தமாகவே செய்வதுதான்.

கடந்த 2018ல் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ; ஃபால் அவுட்’ படத்தில் விமானத்திலிருந்து டைவ் அடித்து, வானத்தில் உண்மையாகவே ஒரு சண்டை காட்சியை டாம் க்ரூஸ் செய்திருந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தது. மிஷன் இம்பாசிபிள் தொடரின் கடைசி பாகங்களாக மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கோனிங் பாகம் 1 மற்றும் 2 என இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

இதில் டெட் ரெக்கோனிங் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. கொரோனா காலக்கட்டத்திலேயும் மிகுந்த பொருட்செலவில் டாம் க்ரூஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் டாம் க்ரூஸ் மேற்கொண்ட சில ஸ்டண்ட் காட்சிகளை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பைக்கில் மலைமீதிருந்து உண்மையாகவே டாம் க்ரூஸ் குதிக்கும் காட்சிகள் பலரையும் வாய் பிளக்க செய்துள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ இசை விழாவில் ஜோதிகா வராதது ஏன்? மாமனார் - மருமகள் சண்டையா?

சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா ப்ரதீப் & விக்னேஷ் சிவன் கூட்டணியின் LIK?

பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த பிரபுதேவாவின் ‘யங் மங் சங்’ ரிலீஸ் திட்டம்!

திருப்பதி கோவிலுக்கு பிரபல இயக்குனருடன் சென்ற நடிகை சமந்தா.. மீண்டும் காதலா?

அடுத்த கட்டுரையில்