Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த படம் தோல்வி என சொன்ன ஜாதகம்… அதனால்தான் பாபா ரி ரிலீஸா?

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (10:23 IST)
பாபா படத்தை ரஜினி ரி ரிலீஸ் செய்ததின் பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று பாபா படம் ரி ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் படத்தில் இருந்து அரைமணிநேரம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து பல திரைகளில் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியான நிலையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மற்ற பொதுவான சினிமா ரசிகர்கள் இந்த படத்துக்கு ஆதரவளிக்கவில்லை..

இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சிக்கு ஆரவாரமான வரவேற்புக் கிடைத்த நிலையில் அதன் பின்னர் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளில் இருந்து எந்த திரையரங்கும் பாதி இருக்கைகளை கூட தாண்டவில்லையாம். மேலும் பல திரைகளில் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே டிக்கெட்கள் விற்பனை ஆனதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் ரஜினியின் ஜாதகப்படி அடுத்து அவர் நடிக்கும் திரைப்படம் தோல்வியடையும் என உள்ளதாகவும், அதனால்தான் ஏற்கனவே ப்ளாப் ஆன பாபா படத்தை ரி ரிலீஸ் செய்ததாகவும் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினிக்கு ஜாதகம், ஜோதிடம் ஆகியவற்றின் மீது அபாரமான நம்பிக்கை உண்டென்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments