Publish Date: Fri, 06 Oct 2023 (11:14 IST)
Updated Date: Fri, 06 Oct 2023 (11:15 IST)
தங்கம் விலை நேற்று சென்னையில் ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் அதிகரித்த நிலையில் இன்று அதே பத்து ரூபாய் குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5285.00என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 42280.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5755.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 73.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73000.00 எனவும் விற்பனையாகி வருகிறது