Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவரை விவாகரத்து செய்யும் சூர்யா பட நடிகை!

Advertiesment
isha deol- Bharath

Sinoj

, வியாழன், 8 பிப்ரவரி 2024 (21:39 IST)
நடிகை இஷா தியோல் தன் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரபல நடிகை ஹேமமாலினி, தர்மேந்திரா தம்பதியின் மகளும் இந்தி நடிகையுமான இஷா தியோல் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்த ஆயுதம் எழுத்து என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன்பின்னர், இந்தி சினிமாவில், கோயி மேரே தில் சே பூசே, ஷாதி நம்பர் 1, தூம் உள்ளிட்ட 30 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2012  ஆம் ஆண்டு பரத் தக்கானி என்ற தொழிலதிபரை இஷா தியோல் திருமணம் செய்தார். அதன்பின்னர்,  சினிமாவில் இருந்து விலகினார். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு கேக்வாக் என்ற குறும்படத்தில் இஷா தியோல் நடித்திருந்தார். இந்த  நிலையில், இஷா – பரத் இருவரும்  தங்கள் 12 வருடன் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி  இருவரும் பரஸ்பர  சம்மதத்துடன் விவாகரத்து அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''மியூசிக் கற்றுக் கொடுத்தது என் அக்காதான்''- யுவன்சங்கர் ராஜா உருக்கம்