Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெறிக்கவிட்ட காட்ஸில்லா – மான்ஸ்டர்களின் அரசன்

தெறிக்கவிட்ட காட்ஸில்லா – மான்ஸ்டர்களின் அரசன்
, வெள்ளி, 31 மே 2019 (10:52 IST)
நாம் வாழும் இந்த உலகத்தில் நமக்கு முன்னால் வாழ்ந்த பெரிய பெரிய உயிரினங்களுக்கு பெயர்தான் ம்யூட்டன்ஸ் (Mutants). இந்த ம்யூட்டன்ஸை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அனைத்து நாட்டு விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு மோனார்க் (Monarch). இந்த அமைப்பு உலகமெங்கும் 17 வகையான ம்யூட்டன்கள் இன்னமும் உறைந்து போய் உயிரோடு இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அவை உறக்க நிலையிலிருந்து எழுந்தால் உலகத்தை அழித்துவிடும் என்பதற்காக தொடர்ந்து அவைகளை உறக்க நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு ம்யூட்டன் உயிரியை மட்டும் அவர்கள் என்ன செய்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுதான் காட்ஸில்லா.

இந்நிலையில் உலக மக்கள் தொகை அதிகரிப்பே உலகத்தை அழித்துவிடும். மனிதன் கேவலமான மிருகம். அதனால் இந்த ம்யூட்டன்ஸை எழுப்பிவிட்டு மனிதர்களை அழித்து இயற்கையை காப்பாற்றலாம் என முட்டாள்தனமாக யோசிக்கும் ஆராய்ச்சியாளர் எம்மா, ஆயுத வியாபாரி ஜோனாவுடன் சேர்ந்து கொள்கிறாள். அவர்கள் எழுப்பிவிடும் ஜந்துக்களில் மிகவும் மோசமானது ’கிடோரா’ எனப்படும் மூன்று தலை ட்ராகன். கிடோரா எழுந்ததும் உலகின் எல்லா பகுதிகளிலும் உள்ள ம்யூட்டன்களை தனது கட்டுக்குள் கொண்டு வந்து பூமியை சர்வநாசம் செய்ய தொடங்குகிறது. மறுபடி இந்த ஜந்துக்களை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று தெரியாமல் மோனார்க் திண்டாடுகிறது. அப்போதுதான் அக்னியில் பூத்த நெருப்பாக கடல் ஆழத்திலிருந்து எழுந்து வருகிறான் காட்ஸில்லா.
webdunia

காட்ஸில்லாவுக்கும், கிடோராவுக்கும் புராண காலத்திலிருந்தே பகை இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் காலம் காலமாக கிடோரா, ராடோன் போன்ற ஆபத்தான விலங்குகளை அழித்து மக்களை காத்து வந்ததே காட்ஸில்லாதான் என்கிற உண்மை மோனர்க் அமைப்புக்கு தெரிய வருகிறது. கட்டகடைசியாக நடக்கும் உச்சக்கட்ட போரில் கிடோராவை அழித்து காட்ஸில்லா எப்படி டான் ஆகிறது என்பதை படம் முழுக்க சுவாரஸ்யமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

எப்படி அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பார்க்கும் முன்னர் 18 படங்களை பார்க்க வேண்டியிருக்கிறதோ அதுபோல இந்த காட்ஸில்லாவும் மிகப்பெரிய தொடராக வெளிவர இருக்கிறது. இதற்கு முன்னால் 2014ல் வெளிவந்த காட்ஸில்லா படமும், 2017ல் வெளிவந்த ‘Kong: Skull Island’ படமும் இதனுடைய தொடரில் முதலில் வந்த படங்கள். அடுத்து 2021ல் கிங் காங்குக்கும், காட்ஸில்லாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய யுத்தமே நடக்க இருக்கிறது. யார் டான் என்பதற்கான யுத்தமாக அது இருக்கும்.
webdunia

குழந்தைகளின் கோடை விடுமுறை முடியும் இந்த நேரத்தில் வெளியானாலும் குழந்தைகள் கொண்டாடும் படம் காட்ஸில்லா. எனவே பள்ளி தொடங்கும் முன்னர் குழந்தைகளை அழைத்து செல்ல அருமையான ஒரு சம்மர் எண்ட் படமாக இது இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்லா இருக்கா, இல்லயான்னு சொல்ல முடியாத படம் – என்.ஜி.கே. பற்றி ரசிகர்கள் கருத்து !