Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Cannes Red Carpet - அரை நிர்வாண பெண்ணால் பரபரப்பு!

Advertiesment
Cannes Red Carpet - அரை நிர்வாண பெண்ணால் பரபரப்பு!
, சனி, 21 மே 2022 (16:06 IST)
கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தின் மீது அரை நிர்வாண பெண் எதிர்ப்பாளர் ஒருவர் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. 

 
பிரான்சில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டு கேன்ஸ் 75வது சர்வதேச திரைப்பட கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் போர் என்பதை கருப்பொருளாக கொண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. 
 
75 வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா பிரெஞ்சு ரிவியரா நகரில் மே 28 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் Stop Raping Us என்ற வாசகத்தை உடல் முழுவதும் வரைந்து பெண் ஒருவர் அரைநிர்வணமாக நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக கேன்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்து, அப்பெண்ணை ஒரு கோட்டில் மூடி, சுற்றியிருக்கும் கேமராக்கள் புகைப்படமெடுப்பதைத் தடுத்தனர். 
 
அந்த பெண் மார்பு மற்றும் அவளது உள்ளாடையை சுற்றி கைரேகை வடிவில் இரத்த சிவப்பு வண்ணத்தில் பெய்ண்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘உனக்க்கு ஓகே ஆகுற வர எடு’… லோகேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்த கமல்!