Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்வெலில் மீண்டும் வருகிறார் ராபர்ட் டோனி! ஆனா அயர்ன் மேன் கிடையாது! - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மார்வெல்!

Advertiesment
Doctor Doom

Prasanth Karthick

, ஞாயிறு, 28 ஜூலை 2024 (09:19 IST)

பிரபலமான சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டுடியோஸ் மீண்டும் மார்வெல் படங்களில் ரசிகர்களின் விருப்ப நாயகனான ராபர்ட் டோனி ஜூனியர் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 

ஹாலிவுட்டில் சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து உலக அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ். தற்போது மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் அண்ட் வுல்வரின்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சாண்டியாகோ காமிக் கான் திருவிழாவில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ்

 

மார்வெல் படங்களில் அயர்ன் மேனாக நடித்து உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை ஈட்டியவர் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டோனி ஜூனியர். அயர்ன் மேன் என்றாலே ராபர்ட் டோனி மட்டும்தான் என ரசிகர்கள் செட் ஆகியிருந்த நிலையில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் அயர்ன் மேன் கதாப்பாத்திரம் இறந்து போனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பின்னர் ராபர்ட் டோனி ஏதாவது கேமியோ ரோலாவது வர மாட்டாரா என ரசிகர்கள் ஏங்கி கிடந்தனர். 

webdunia
 

இந்நிலையில் ஒரு புதிய கேரக்டரில் மார்வெலில் ராபர்ட் டோனி தோன்றுவதாக மார்வெல் அறிவித்துள்ளது. ஆனால் இந்த முறை ஹீரோவாக அல்ல வில்லனாக. மார்வெலின் புகழ்பெற்ற சூப்பர் வில்லனான டாக்டர் டூம் (விக்டர் வான் டூம்) கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் ராபர்ட் டோனி. 2026ம் ஆண்டு வெளியாகவுள்ள அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் மூலமாக ராபர்ட் டோனி அறிமுகமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

நேற்று சாண்டியாகோ காமிக் கானில் டாக்டர் டூம் மாஸ்க்குடன் தோன்றிய ராபர்ட் டோனியை கண்டு ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கத்தி கூப்பாடு போட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் ராக்கர்ஸ் முக்கிய அட்மின் கைது.. ரூ.5000 பணத்திற்கு செய்ததாக தகவல்..!