Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே..! மீண்டும் வந்த கேப்டன் அமெரிக்கா! - Captain America Brave New World தமிழ் ட்ரைலர்!

Captain America

Prasanth Karthick

, திங்கள், 15 ஜூலை 2024 (12:25 IST)

மார்வெல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த கேப்டன் அமெரிக்கா: ப்ரேவ் நியூ வேர்ல்ட் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்ட சூப்பர்ஹீரோ படங்கள் தயாரிக்கும் நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். அயர்ன்மேன், ஹல்க், ஸ்பைடர் மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், கேப்டன் அமெரிக்கா என ஏராளமான சூப்பர்ஹீரோக்களை மையப்படுத்திய படங்களை வெளியிட்டு வரும் மார்வெல் நிறுவனம், அனைத்து ஹீரோக்களையும் சேர்த்து அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், எண்ட் கேம் படங்களை எடுத்து உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

ஆனால் அதன்பின்னர் மார்வெலில் வெளியாகி வரும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இந்த மாதம் வெளியாக உள்ள டெட்பூல் அண்ட் வுல்வரின் படமும், அதை தொடர்ந்த படங்களும் மார்வெலை மீண்டும் உயிர்பிக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில்தான் தற்போது கேப்டன் அமெரிக்கா; ப்ரேவ் நியூ வேர்ல்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தானோஸ் உடனான போருக்கு பின்னர் கேப்டன் அமெரிக்கா என பெயர் பெற்ற ஸ்டீவ் ரோஜர்ஸ் அவெஞ்சர்ஸில் இருந்து ரிட்டயர்ட் ஆனதுடன், தனது ஷீல்டை தனது நண்பரான சாம் வில்சனிடம் கொடுத்துவிட்டு சென்றார். சாம் வில்சன் ‘ஃபால்கன்’ என்ற சூப்பர் ஹீரோவாக அறியப்பட்டவர்.

The Falcon and the winter soldier வெப்சிரிஸின் மூலம் ஸ்டீவ் ரோஜர்ஸின் பால்ய நண்பானான பக்கி என்கிற விண்டர் சோல்ஜரும், சாம் வில்சனும் ஒன்று சேர்ந்தனர். அதிலேயே சாம் அடுத்த கேப்டன் அமெரிக்கா ஆவதற்கான சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள Captain America: Brave New World கவனம் பெற்றுள்ளது. சாம் வில்சனை ஒரு சர்வதேச மிஷனில் ஈடுபடுத்துகிறார் அமெரிக்காவின் புதிய அதிபராகும் தேடியஸ் ராஸ். அதில் சாம் வில்சன் எதிர்கொள்ளும் வில்லன்கள், மோசடிகள், அதை எப்படி அவர் முறியடித்தார். தேசத்தின் அடுத்த கேப்டன் அமெரிக்காவாக எப்படி மாறுகிறார்? என்பதுதான் கதை.

இந்த ட்ரெய்லரில் Red Hulk போன்ற சில சூப்பர் ஹீரோக்களின் கேமியோக்களை காண முடிகிறது. பழைய கேப்டன் அமெரிக்காவான ஸ்டீவ் ரோஜர்ஸ் இதில் கேமியோவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஜாவா’!