Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெடி 2 எல்லாம் இல்லங்க…. ஆர்யா நெக்ஸ்ட் அப்டேட்!

டெடி 2 எல்லாம் இல்லங்க…. ஆர்யா நெக்ஸ்ட் அப்டேட்!
, செவ்வாய், 29 ஜூன் 2021 (08:56 IST)
ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆர்யா மற்றும் அவருடைய மனைவி சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் டெடி. இந்தப் படத்தை சக்தி சவுந்தர் ராஜன் என்பவர் இயக்கியிருந்தார். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். டெடி என்ற அனிமேஷன் கேரக்டர் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக அமைந்தது.

ஓடிடியில் நேரடியாக இந்த படம் வெளியான நிலையில் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஆர்யா மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாகவும், ஆனால் அது டெடி 2 இல்லை என்று சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாக உள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வித்தியாசமான உடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை ராஷிகண்ணா!