நெருங்கிய தோழியை திருமணம் செய்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகை, "என் தோழி மிகவும் அழகானவர்" என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹாலிவுட் திரைப்பட நடிகை கிறிஸ்டியன் ஸ்டீவர்ட், நடிகர் ராபர்ட் பட்டீஸ்ன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால், இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
இந்த நிலையில், நடிகை கிறிஸ்டியன் ஸ்டீவர்ட், பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகை டைலன் மேயர் என்பவருடன் ரிலேசன்ஷிப் வைத்திருந்ததாக கூறப்பட்டது. பின்னர் இருவரும் தங்கள் காதலை 2021ஆம் ஆண்டு வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஸ்டீவர்ட், வீட்டில் இருவருக்கும் திருமணம் நடந்ததாகவும், ஒரு வாரத்துக்கு முன்பே திருமணத்தை முறைப்படி பதிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த திருமணம் குறித்து பேசிய கிறிஸ்டியன் ஸ்டீவர்ட், , “டைலன் மிகவும் அழகானவர். அவர் என்னை ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். எங்கள் திருமணத்திற்கு தேவையான விஷயங்களை நானே கவனமாக அமைத்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்,” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.