ஹாலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனட் திரைப்படம் இந்தியாவில் வெளியாக உள்ள நிலையில் நோலன் தனது இந்திய ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
	
	
	பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் டெனட். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் எந்த ஹாலிவுட் படமும் வெளியாகாத சூழலிலும் ஆகஸ்டில் டெனட் பல்வேறு நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்த திரைப்படத்தில் இந்தி நடிகை டிம்பிள் கபாடியா நடித்துள்ள நிலையில் படத்தின் பல காட்சிகள் இந்தியாவிலேயே படம் பிடிக்கப்பட்டன. இதுகுறித்து வார்னர் ப்ரோஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள நோலன் “இந்தியாவில் எனது படத்தின் சில காட்சிகளை எடுக்க முடிந்தததில் மிக மகிழ்ச்சி. டிம்பிள் கபாடியா போன்ற நல்ல நடிகர்களையும் படத்தில் இடம்பெற செய்ய முடிந்தது. இந்திய ரசிகர்கள் இந்த படத்தை ஐமேக்ஸில் பார்த்தால் புதிய அனுபவத்தை தரும்” என கூறியுள்ளார்.
இந்த டெனர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நாளை வெளியாக உள்ளது.