Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவெஞ்சர்ஸை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம்! – அவதார் சாதித்தது எப்படி?

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (09:15 IST)
பிரபல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான அவெஞ்சர்ஸை பின்னுக்கு தள்ளி மீண்டும் அவதார் வசூல் சாதனையில் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சூப்பர்ஹீரோ படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். உலகம் முழுவதும் வெளியாகி பல கோடிகள் வசூல் செய்த இந்த படம் உலகளவில் அதிக அளவில் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.

உலகளவில் அதிக வசூல் செய்த படமாக அவதார் இருந்து வந்த நிலையில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், அவதாரை விட சில மில்லியன் டாலர்களை அதிகமாக ஈட்டியதன் மூலம் முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் கடந்த வாரம் அவதார் திரைப்படம் மீண்டும் சீனாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக பல திரையரங்குகள் செயல்படாத நிலையில் ஆரம்ப இரண்டு நாட்களிலேயே அவதார் பட டிக்கெட்டுகள் 3.5 மில்லியனுக்கு விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் எண்ட்கேமை இரண்டாவது இடத்திற்கு தள்ளி 2.798 பில்லியன் டாலர்கள் வசூலுடன் முதலிடம் பிடித்துள்ளது ஜேம்ஸ் கேமரூனின் அவதார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments