Publish Date: Wed, 23 Nov 2022 (10:38 IST)
Updated Date: Wed, 23 Nov 2022 (10:41 IST)
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகவுள்ள அவதார் இரண்டாம் பாகத்திற்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்குகின்றது.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் அவதார். இன்று வரை உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் டிசம்பர் 16ல் வெளியாக உள்ள நிலையில் படத்திற்காக பலரும் ஆவலாக காத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவதார் தி வே ஆப் வாட்டர் படத்திற்கு இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் மற்றும் இன்ன பிற திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக பெங்களூரில் ஐமேக்ஸ் திரையரங்கில் ஒரு டிக்கெட் ரூ.1450 க்கு விற்பனையாகிறது.
4டிஎக்ஸ் திரையரங்குகளில் குறைந்த பட்சமாக ரூ.450க்கு தொடங்கி ரூ.750 வரை டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. டிசம்பர் 16ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் முதல் காட்சி அன்று நள்ளிரவு 12 மணிக்கே பல திரையரங்குகளில் தொடங்குகிறது.