Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்வெல் வெப் சிரிஸில் ஒலித்த ரஜினிகாந்த் பாடல்! – ரசிகர்கள் செம குஷி!

Advertiesment
Ms Marvel
, வியாழன், 9 ஜூன் 2022 (15:53 IST)
பிரபலமான மார்வெல் சூப்பர்ஹீரோ வெப்சிரிஸில் டைட்டில் கார்டில் ரஜினி பட பாடல் இடம்பெற்றது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர்ஹீரோ படங்களை உருவாக்கி வரும் நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். சமீபத்தில் வெளியான மார்வெல் நிறுவனத்தின் Spiderman No Way Home, Doctor strange and the multiverse of madness உள்ளிட்ட படங்கள் உலகளவில் பெருமளவு வசூலை குவித்துள்ளன.

அவெஞ்சர்ஸ் முடிவுக்கு பிறகு வெப் சிரிஸ் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் மார்வெல் மூன் நைட், லோகி உள்ளிட்ட மினி தொடர்களை தயாரித்து வெளியிட்டது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய வெப் சிரிஸ்தான் “மிஸ் மார்வெல்”. கமாலா கான் என்ற அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் வம்சாவளி பெண் சூப்பர்ஹீரோ ஆவதுதான் கதை.

இதன் முதல் எபிசோட் நேற்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. அதில் மிஸ் மார்வெல் டைட்டில் வரும்போது, ரஜினிகாந்த் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த லிங்கா படத்தில் வரும் முதல் பாடலான “ஓ நண்பா நண்பா” பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி பாடியிருந்தார்.

முதன்முறையாக ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படத்தில் தமிழ் பாடல் இடம்பெற்றுள்ளது ட்ரெண்டாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்தில் முடிந்த நெடுநாள் காதல்! – புகைப்படத்துடன் பதிவிட்ட விக்னேஷ் சிவன்!